Friday, 17 October 2014

ராமவாணம் ஒளிரும் கணம்

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாவகமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்

சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக்கணைகளை முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப்பூ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின்அத்தனை அம்புகளும் ஒளிர்கிறது ராமர் பச்சையில்

ஆனந்த விகடன் 22.10.2014





Monday, 13 October 2014

சிறகுகளைக்கத்தரித்தல்



பறவைகளை
சிறைப்பிடிப்பது
வளர்த்தலாகுமா
என்பதென்
ஞானக்கேள்வி

வல்லூறுகள் பற்றிய கவலையில்லை
மேலும் சிறுதானியச்சேர்க்கைக்கான பிரயத்தனமுமின்றி
வாழ்வதிலென்னசிரமம்
என்றவனை

நீலக்கூரைக்கென்ன
செய்வாயென
மடக்கியதும்
படபடத்தான்

ஆளரவமில்லாப்
பின்னிரவில் மலைகளைத்தாண்டி
நகரத்தின் இடுக்கிலிருந்த
மண்மரப்பொந்தையடுத்துக்
கூவினேன்

மாமா என்று பதிலுக்குக்
கூவித்திறந்ததென்
பஞ்சவர்ணம்
அப்பா வந்தாச்சென
கீச்சொலியெழுப்பின
அதன் குஞ்சுகள்


அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...