Saturday, 14 February 2015

வஞ்சிரத்துண்டு

பச்சை வாசம்
நிரவிக்கிடக்கும்
வாசல் உன்னது.

ஊழிமீனைக்
கையாளுவதை
பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான்
தொண்டைச்சங்கில்
இறங்கியது தூண்டிமுள்.


நானேதான்
இப்பவும்
மாருக்கிடையில்
பாசிமணி டாலரில்
செவுள் கிழியத்
தொங்குவது.

யாரும் பார்த்திராத
உதடுகளால்
நீ சொன்னதைத்தான்
மூச்சுக்கு தவிக்கும்
இந்தக் கெண்டைகளும்
சொல்கின்றன.

ஒருகை
நீரள்ளித்தெளித்து
விடவா

ரொம்பத்
தூண்டுகிறது
இந்த
வஞ்சிரத்துண்டு

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...