Tuesday, 4 November 2014

சிகெரெட் என்பது சிகெரெட் அல்ல


சிகரெட் என்பது
கைக்குட்டை
போர்த்திக்கொள்ளப் பார்க்கிறேன்

சிகரெட் என்பது
சாயுந்தோள்
கண்ணீர் திரள்கையில்
தேடுகிறேன்

சிகரெட் என்பது
சினேகிதச்சங்கிலி
பாதியில்
அறுத்து வீசுகிறேன்

சிகரெட் என்பது
இடைவேளை
பெருமூச்சை
வெளிவிடப் போகிறேன்


சிகரெட் என்பது
நித்தியத்துள்
மெல்லப்படியிறக்கும்
சம்மனசு

சிகரெட் என்பது
முத்தம் அல்ல

சிகரெட் என்பது
நீளிரவு

சிகரெட் என்பது
நிழல் மரம்
தேநீர்
அருந்தப்போகிறேன்

சிகரெட் என்பது
தோழமை
பதட்ட நெஞ்சை
நீவுந்தோழி

சிகரெட் என்பது
தாய்மடி

சிகரெட் என்பது

ஆதூரங்கசியும்
மார்க்காம்பு





2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

சொல்லிய வரிகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... அனுபவித்தவர்களுக்கு தெரியும்...

அதச்சொல்லு

மலை  நடுங்கி நிலம் சரிவதும் காடு  காய்ந்து ஆனை சாவதுமெல்லாம்  கேட்டின் நிமித்தம் ஆளுயர  மாலைக்கும்  கோபுரமாய்  செண்டு கட்டிப் பேரெடுத்த  பூக...