கர்ப்பிணிப் பெண்ணின்
முலைகளென
பூரித்த கருணையோடு
அரவணைத்துக்கொள்கிறது
நோய்மை
இந்தக்கதகதப்பு
தனிமையில் உறைந்த
விரல்களுக்கு
எத்தனை ஆதூரமாயிருக்கிறது
உறக்கத்திற்கும்
மரணத்திற்கும்
தியானத்திற்கும்
ஊடான
குறுக்குவெட்டுப்பாதையில்
பயணிப்பது
பரமசுகம் இல்லையா
உன்னோடு பேசுவதை
உளறல் என்றால்
வா நாம் கோமாவுக்குப் போவோம்
வினோதமாய்
நிறம் மாறும்
இவர்களிடையே
என்னை
மீளக்கையளித்துவிடாதே
என் அன்பே
_காலச்சுவடு183
மார்ச் 2015
1 comment:
// மீளக்கையளித்துவிடாதே // அருமை...
Post a Comment