ஊரோடு கோபித்துக்கொண்டு
ஒதுங்கி நிற்கும் அந்த மரம்
தலைமயிரை அள்ளிக்கட்டி
கண்ணீரை அவிழ்த்துவிட்டு
தாய் வீட்டின் வழியேகும்
அபலையென
பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது..
தூக்கத்திலிருந்ததை தட்டியெழுப்பி
நெடுஞ்சாலை விரிவாக்கம்
உறுதியென்று
பொக்லைன் சொன்ன நாள் முதலாய்
உடல் நடுங்குமது
ஆளண்டாப் பெருவனஞ்சேர்க்கும்
பேருந்து வரப்பார்க்கிறது.
பச்சைக்குருதிப்புண்ணை
ஃப்ளெக்ஸ் பருந்து கொத்திக் குடைய
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு
அடுத்து வரும் வண்டியை மறித்து
கையை நீட்டுகிறதம்மரம்
No comments:
Post a Comment