Thursday, 13 February 2020

நூற்றியெட்டை மறித்தல்


நீரோடையில் மிதக்கும்  
ஒற்றை மலர் என் வண்டி
மாலுமி  பெடலைச் சுழற்றினால்  
ஓடை பெருகி  கடலாகும்
இந்த ஆம்புலன்ஸோ
சாக்கடையின் நடுநெஞ்சில் 
ஓலமிட்டு நீந்துகிற வாத்து 
அதைப் பார்த்தாலே எனக்கு எரியும்
மாற்றுத்திறனாளியானால் என்ன
அவலங்களுக்கு எதிராக
துரும்பையாகிலும்   நகர்த்துவோம் என்கிறாள் தோழி
எனது மூன்று சக்கரத்தையும்  நகர்த்தி
அவசரவூர்தியின் குறுக்கே போடுவேன்
அதன் அலறலும்
தொடர்ந்தோடும்  வண்டிகளின் பதறலும்
தனியள் என்று என்னைப் பரிகசிப்பது போலில்லையா







No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...