Saturday, 21 August 2021

பெரிது கேள்

உன்னுடன் 

விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்

வண்டி வந்து விட்டது!


இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி

குதிரைகள் பூட்டிய குடை வண்டி

குட்டிக்கார் குபேரத்தேர்


நீ 

அமைதியாயிரு..

உன் மைதானத்தைப் போல


அதைவிடப் பெரிதாய் 

ஆனை வரும் 

அன்றேல்

ஆனைக் கருப்பில்

இருளிறங்கும் 


இருளினும் பெரிதாய் 

கனவை வரை.

அதனினும் பெரிதென்று

எதுவுமில்லை.


காத்திரு.. காத்திரு..

சாகாதே!


Sunday, 15 August 2021

முன்னும் பின்னும்



மழை பெய்வதற்கு முன்பே

மழை பெய்து கொண்டிருந்தது.

மழை பெய்த பின்னும்

மழை பெய்து கொண்டிருக்கிறது.




அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...