சோட்டா பீம், இந்துமதி,
சுட்கி, காளியா,ராஜூ
டோலு மற்றும் போலுவோடு
சேர்ந்து விளையாட
பெருவிருப்பம் கொண்ட
எஸ்.செந்தில் குமாருக்கு
ஏக்கத்தில் காய்ச்சலே வந்து விட்டது
சாவி கொடுத்தால் ஓடும்
பந்தயக் காரொன்றைப் பரிசளித்து
மடைமாற்றப் பார்க்கிறாள் அம்மா
வீட்டிலிருந்து வீதிக்கு இறங்கி
இடம் வலமாய் திரும்பி
சாலையைப் பிடித்து
டாப் கியரில்
வேகமெடுக்கும் அந்தக் கார்
இன்னும் சில நிமிடங்களில்
டோலக்பூரை அடைந்து விடும்.
No comments:
Post a Comment