Tuesday, 24 November 2015

புதிய வார்ப்புகள்


அவனது மேசையில் அணிவகுத்து நிற்கின்றன
வெள்ளை ரோஜாக்கள்.
இன்னும் சில நொடிகளில்
அவை பரோட்டாக்களாக உருமாறும்.
தாமரை இலைகளென நீள் வட்டங்களையும்
கருவிகளின்றி
துல்லிய வளைவுகளையும்
மாவுக்கிண்ணத்தால் வரைந்து தள்ளுகிறான்
புதிய வார்ப்புகளின் கர்த்தா.
புத்தம் புதிய வண்ணச்சித்திரங்கள்
ஆம்லெட்டுகளில்.
பின்னணி இசை சேர்த்த கொத்து பரோட்டா
சண்டைக் காட்சிகள்.
வெண்புகைசூழ் கனவுகளை ஆள்கிறாள்
ஆக்கிப் போட வருவதாக வாக்களித்த தேவதை.
( கவனம்,வெள்ளுடுப்பில் அப்பிக்கொள்ளப்
போகிறது அடுப்புக்கரி)
துவையல் அரைக்கும் தருணங்களில்
புறங்கையால் கூந்தல் திருத்தும்
கணப்பொழுது திரும்பத்திரும்ப..... திரும்பத்திரும்ப.....
’லைனுக்கு ரெண்டு ஆனியன் ரோஸ்ட்’டில்
துண்டிக்கப் படுகிறது அந்த காதல் காட்சி.


No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...