Thursday, 19 November 2015

இழவு வீட்டுக் குழந்தை

அழ வேண்டுமா 
சிரிக்க வேண்டுமா
ஒரு எழவுந்தெரியவில்லை
அந்தக் குழந்தைக்கு 
படுக்க வைத்திருந்தவனை 
கொஞ்ச நேரம் வெறித்து விட்டு
அவனது வண்டியருகில் போய் நின்று கொண்டது
யாரோ தூக்கி அதில் உட்காரவைத்தார்கள் 
அபத்தஞ்செய்துவிட்ட தன் கையை 
பறையில் அறைந்து கொண்டான் கடவுள்.




2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

கண் முன்னே காட்சிகள் விரிகின்றன! அருமை!

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...