Thursday, 9 January 2020

நறுவிசு

அடுப்பைத்துடைத்து
பாண்டங்கள் கழுவி
முகம்திருத்தி
படுக்கைக்கு
வருகிறாள் பத்தினி.
அவளுள்ளும் புறமும்
அவ்வளவு நிம்மதி.

வீட்டுக்குத்திரும்பும்
தெருமுக்கில்
ஒற்றைக்காலூன்றி
நான் துலக்கிவைத்த
எனது உள்பெட்டிகளின்
அதே நிர்மலம்.

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...