Friday, 7 February 2020

ஸ்விகிப்பையன்


விளக்கைத் தேய்க்க 
பூதம் வந்த கதைதான் 
ஸ்விக்கிப் பையனுடையதும்.
பதறப்பதற பொதியை வாங்கி 
கனலை அணிந்து பறக்கிறான்.
காற்று தழுவ 
சாம்பல் பறந்து 
ஒளிர்கிறது கங்கு!
'சாப்பிட நேரம் கிடைக்காது
யாரிடமோ சொல்கிறது 
பிணி தீர்க்குஞ்சிறுதெய்வம்.
ஒரு கையை 
பாக்கெட்டில் விட்டுக்கொண்டு
குழந்தை கழட்டிப் போட்டதை 
வாங்குவது போல் 
முகத்தை வைத்துக் கொள்கிறாய்.
முறுவல் என்பது 
சாத்தான் குஞ்சுகளுக்கு 
விலக்கப்பட்ட கனி .
இல்லையா?






No comments:

நமக்குக் கிடைத்த பரிசு - பாவண்ணன்

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்...