Saturday, 23 January 2021

பொன்னை வைக்கிற இடம்



 

சிறுவனின் தலையில் திருப்புளியால் அடித்த போது துடித்துப்போனார்.
'பிரிண்டுக்கு போவதற்கு முன்பே
பாத்திருக்க வேண்டும்.
உங்களுடைய தவறுதான்.. '
'வேறேதும் வழியில்லையா?'
'நேற்று பையனின் தொடையில்
குறடால் கிள்ளினான் அந்த மெக்கானிக்..'

'மனித இருதயங்களை அவ்வளவு நேரம் உலர வைக்க வேண்டியதில்லை.... சொல்லும்போது கேட்டால்தானே? '
'பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது யார்?'
'அவனை செல்வந்தன் ஆக்கிவிடவா?'
'வாய்ப்பில்லை... உங்கள் பேங்க் பேலன்ஸைப் பாருங்கள்.
வாரியிறைக்கிற போது யோசித்திருக்க வேண்டும்..'
'எனக்கு கண்ணில்லாமல் போயிற்றா?'
'கவனமில்லாமல் போயிற்று அவ்வளவுதான்!'
'குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..'

தன்னுடைய முந்தானையில் முடிந்திருந்ததை இவருடைய மேசையில் கொட்டினாள்.
நான்கு பொன்வண்டுகள்.
'அந்தப் பையன் வருகிற வழியில் போட்டு வைப்போம்.
இப்போதைக்கு அவ்வளவுதான் செய்ய முடியும்'






ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...