மலை
நடுங்கி
நிலம் சரிவதும்
காடு
காய்ந்து
ஆனை சாவதுமெல்லாம்
கேட்டின் நிமித்தம்
ஆளுயர
மாலைக்கும்
கோபுரமாய்
செண்டு கட்டிப் பேரெடுத்த
பூக்கடை மாரியப்பன்
ஏற்கனவே
சொன்னதுதான்
என்றைக்கு
வானொலியில்
தேன்சொட்டும்
பாட்டை வெட்டி
விளம்பரக்கடை
விரித்தானோ
அன்றைக்குப் பிடித்தது கேடு.