Wednesday, 11 March 2015

நோஞ்சான்களை காணச்சகிப்பதில்லை


நா வரள
கை  நீட்டியது
எலும்பு துருத்திய  மரம்.
நோஞ்சானைக்
காணச்சகியாமல்
சன்னலுக்கருகிருந்த
தண்ணீர்போத்தலை
பைக்குள் வைத்தேன்.
பேருந்து இறங்கஇறங்க
உயர்த்திக்காட்டுகிறது.
கண்டுகொள்ளவேயில்லை.
அடிவாரம் சேர்ந்ததும்
ஓரக்கண்ணால் பார்க்க
விரிசல் விட்டிருந்தது வானம்.

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...