Sunday, 28 June 2020

அருள்நிறை மரியே

மருத்துவரை
உன் பொறுப்பினில் விட்டோம்
செவிலியரையுன் பாதஞ்சேர்த்தோம்
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக...
நோய்ப்பிணியாளரை
நினைத்துக் கொள் தாயே
தூப்புக்காரரை பார்வைக்கு வைத்தோம்
காத்துக்கொள் தாயே
கன்னி மரியாயே
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக
கூப்பிய கரங்களின் ஒளியுருவாக
மெழுகின் தலையும் மெல்ல அசைந்தது
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக...
காய்கறிக்காரர், களப்பணி செய்வோர்
பொதுப் பணியாளர் அத்தனைபேரையும்
சொல்லச்சொல்ல புரண்டன சொற்கள்
முக்காட்டுக்குள்  மரியாள் தலையசைத்துக் கொண்டேயிருந்தாள்
உன்னை காவலர்  காலடி வைக்கிறோம் என்றது பிழைதான்
ஆமென் என்றது அதைவிடப் பெரும்பிழை
நட்ட நடு ராத்திரியில்
B-7 ஸ்டேஷனின் வாசலில் நிற்கிறாள் மரியாள்
ஜோசப்பின் கூக்குரல் கேட்காதது போல்
வாய்க் கவசத்தை காதுக்கும் இழுத்தேன்

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...