Friday 17 October 2014

ராமவாணம் ஒளிரும் கணம்

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாவகமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்

சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக்கணைகளை முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப்பூ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின்அத்தனை அம்புகளும் ஒளிர்கிறது ராமர் பச்சையில்

ஆனந்த விகடன் 22.10.2014





1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதை அருமையாக உள்ளது ஆனந்தவிகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...