Thursday, 13 February 2020

தீக்குச்சி

000


தேனீர்ப்பொழுதில்
நீளும் குச்சியில்
ஓரிதழ் தாமரை.
அதைகும்பிட்டுக் கொள் 
சிகரெட்டே.


000


தீக்குச்சி
ஒரு கன்னிப்பையன்.
ஆவி தீரத்தீர
காற்றில் எழுதுகிறது
தண்ணெனக் குளிர்ந்த
கருந்துளையை.


000


பெட்டி 
தன்னிடம் சொன்னதை
அப்படியே 
கைமாற்றிவிட்டுப் போனது 
குச்சி.
சிகரெட்டால்
அதை 
ஜீரணிக்கவே 
முடியவில்லை


No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...