Tuesday, 10 December 2019

பல்லிப் பாப்பா


முளைவிட்ட
அத்தனை கிளைகளிலும்
நட்சத்திரம் பூத்து விட்ட
புது நிறக்  குழந்தை.

செங்குத்துச் சுவரில்
எங்கே ஓடுகிறாய்
என் முத்தே?

என்ன செய்கிறாள்
பொறுப்பில்லாத உன் அம்மா ?

எந்தச் சுவரின் முக்கில் நின்று
யார் கதைக்கு 
உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறாளோ?

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...