Tuesday, 10 December 2019

ஆய்வாளர்.அம்மா


எப்படித்தான்சொன்னாலும்
பொய்யென்று
கண்டுபிடித்துவிடுவாள் அம்மா.

விளையாடுகின்ற மகன்
திடுமென்று முகம் வெளுத்தால்
தெரிந்துவிடும் அவளுக்கு
ஆய் வருதா என்பாளே
இவளென்ன போலீஸா?

நேற்றந்தப் பேருந்தில்
உன் மடியிருந்த மரக்கன்றை
தயங்கித் தயங்கி கை நீட்டி
தொடப்பார்த்தாள் அச்சிறுமி

ஒரு கணத்தில் மரக்கன்றும்
தளிர்க்கையை நீட்டியதே
நான் பார்த்தேன் நம்பு அம்மா!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...