Thursday, 9 January 2020

அவன் கட்சி

நாகசுரம்
நாயனம்
நாதஸ்வரம்

என்னென்ன பெயர்கள்
எத்தனையெத்தனை
விவரணைகள்

பீப்பி என்று
சொன்னான் பார்
ஒரு பாலகுரு
நான் அவன் கட்சி

கல்யாண வீட்டினிடையோடுகிற
சிறுவர்களை நிறுத்தி

என் பெயர் பீப்பி
என் பெயர் பீப்பி
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறது

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...