Saturday, 20 September 2014

செல்லப் பூனைக்குட்டி



நாய்களைக் கொண்டாடுகிறேன்
என்பதால்
கோபம் கொள்கிறாய்

நீ ஒருபோதும் விசுவாசமாய்
இருப்பதில்லை பூனைக்குட்டி

எல்லா மடிகளின் சூடும்
உனக்கு வேண்டியிருக்கிறது

தினமொரு மீன் கொடுத்துவந்த
சைக்கிள்
பெருஞ்சக்கரத்தினடியில்
நசுங்கிக் கிடக்கையில்
லாரிக்காரனின்
காலையுரசிக்கொண்டிருக்கிறாய்

என் செல்லப்பூனைக்குட்டி





No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...