Wednesday 17 September 2014

பறக்க இயலாத பறவை





எல் கே ஜி வகுப்பில் 
இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும்                              
தமிழ்ப்பாடநேரம் துவங்குமென 
ஆசிரியை அறிவித்தவுடனே 
ஆங்கிலப் புத்தகத்திலிருந்த 
சித்திரங்கள்               தமிழ்ப்புத்தகத்துக்குத் தாவுகின்றன 
யாரும் அறியா வண்ணம்.
                        
ஜீப்ரா 
வரிக்குதிரை என்றும் 
ஜிராஃபி 
ஒட்டகச்சிவிங்கி எனவும்                    
பெயர்களை
தமிழில் மாற்றிக் கொண்டு 
இடம் பெயர                       
அவற்றைத் தொடருகிறதொரு 
பெருங்கூட்டம்.

லோட்டஸ் 
என்றழைக்கப்படும் தாமரை                    
ரோஸ் 
எனப்படும் ரோஜா                                                 ராபிட்(எ)முயல்                                                                   
பேரட்(எ)கிளி                                                                     
டக் (எ) வாத்து                                                                   யானை, மீன்,மயில், ஆடு...... 
என நீள்கிறது வரிசை
                               
எங்கே இருந்தாலும் 
ஒரே மாதிரி முழி 
இந்த ஆந்தைக்கு.
                          
எப்போதும் 
குழந்தைகளுடன் 
இருப்பதற்கான யுக்தி தெரியாமல்                         
எம்பி எம்பிக் குதித்தபடி
தவிக்கிற பெங்குவினுக்கு                                   தேவை ஒரு தமிழ்ப்பெயர்.


-ஜான் சுந்தர் 
-ஆனந்த விகடன்
-சொந்த ரயில்காரி தொகுப்பில்

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...