Wednesday, 17 September 2014

பிஸ்கட் நிலாக்கள்



குழந்தைகளின் உலகத்தில்,
பூக்களிலிருந்து 
ரோஸ்மில்க் வாசம் வருகிறது.
வகுப்புத்தோழர்கள் இனிஷியல் சுமந்தே திரிகின்றனர். 
அறுபத்துப்பனிரெண்டு போன்ற விசித்திரஎண்கள் 
புழக்கத்தில் இருக்கின்றன.
உண்ண மறுக்கிறவர்களை மட்டும் 
பிடித்துண்ணும் பூச்சாண்டி உலவுகிறான்.
மிருகங்கள் நகங்களை உதிர்த்துவிட்டு 
முகம் பொத்தி விளையாடுகின்றன.
அதீத மாயசக்தியைப் பெற்று பூமியை 
தீமையிலிருந்து காக்க முனைகின்றனர் பிள்ளைகள்.
விளையாட்டுகளுக்கிடையே 
அவர்கள் இடப்போகும் கட்டளைகளுக்கென 
கைகட்டி காத்து நிற்கின்றன தெய்வங்கள்
இனிப்பொளி வீசுகின்றன பிஸ்கட் நிலாக்கள்.


No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...