Thursday, 6 February 2020

பூக்காடு

யோசித்து
யோசித்துப் பின்பு
மகளுக்கொரு பேர் வைத்தேன்
ரோஜா

அண்டை வீடுகளுக்கு என் மனைவி
ரோஜாம்மா- ஆகிப் போனாள்
ரோஜா அப்பா என் பெயரானது
மகனும் ஆனான் ரோஜாண்ணா

ரோஜா பொம்மை
ரோஜா வீடு
ரோஜா பென்சில்
ரோஜா ரப்பர்

எங்கள் வீட்டுத் தொட்டியிலிருந்த
பெயர் தெரியாப் பூவுங்கூட      
ரோஜாப்பூவானது அவர்களுக்கு

ஒரேயொரு பெயரை மட்டுந்தான்
நட்டு வைத்தேன் நான்                                                                  
என் வீடு மெள்ள மெள்ள 
உருமாறிக் கொண்டிருக்கிறது                                                    
கரும்பச்சை இலைகளும்
இளஞ்சிவப்பு மலர்களுமாக                   
முட்களேதுமில்லாத
பெரியதொரு ரோஜாவனமாய்.















No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...