Sunday 12 January 2020

வேளாண்மை


சோற்றைத் தூக்கி
தூக்கில் போட்டு
தூக்கைத் தூக்கி
பையிலிட்டு
பையை மகளின்
வாய்க்குள் போட்டு
மகளைத் தூக்கி
வண்டியில் போட்டு
வண்டியைத் தூக்கி
சாலையில் போட்டு
சாலையைச்சுருட்டி
பள்ளிக்குள்
போட்டு வந்தேன்.
சுருட்டிவைத்ததை
மாலையில் போய்
உதறுவேன்.



No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...