Wednesday 8 January 2020

தாலேலோ

உச்சிக்
கோபுரத்தில்
பழுதுபட்ட
நட்சத்திரம்
உயரத்திலே
பழஞ்சிலுவை
முழங்காலில்
கருங்காய்ப்பு
போதகரின்
முகவொளியில்
பழையவலி
துளியுமில்லை.


அணிகலனே
ஆகி மின்னும்
ஆணிகளும்
திருநாளில்
ஆளுக்கொரு
வண்ணமிட்டு
நவச்சிலுவையாக்கி
வைக்க

உச்சிக்
கோபுரத்தில்
பழுத்திருக்கும்
நட்சத்திரம்
உயரத்திலே
புதுத்துயரம்
முழங்காலில்
செவ்வுதிரம்
போதகரின்
முகவலியில்
புதியவொளி
துளியுமில்லை.

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...